எஸ்.தாணு, ஆஸ்கர் ரவிச்சந்திரன்... இந்த இரு பெயர்களுடன் தயாநிதி அழகிரியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. அஜித்தின் 50வது படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்விக்கான சாய்ஸ் இவர்கள்.

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தற்போது தமிழ் படம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து அஜித்தின் ஐம்பதாவது படத்தையும் கிளவுட் நைன் தயாரிக்கிறதாம்.
அஜித் தற்போது நடித்துவரும் அசல் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் தாணு.
ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அஜித்தின் ஐம்பதாவது படத்தை தயாரிக்கும் விருப்பம் இருக்கிறது. தற்போது தயாநிதியின் பெயரும் அடிபடுவதால், அவருக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. அசல் படத்துக்காக வெளிநாடு சென்றிருக்கும் அஜித் திரும்பி வந்தால் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.

Comments (0)