மீண்டும் அஜித் + சரண் + பரத்வாஜ் கூட்டணி..

அசல் படத்தின் இசையமைப்பாளர் யார்? பரத்வாஜா இல்லை ஹா‌ரிஸ் ஜெயராஜா?பல நாட்கள் நீடித்த இந்த ஊசலாட்டத்துக்கு உறுதியான பதிலளித்துள்ளார் சரண்.

சிவா‌ஜி புரொடக்ஷன் தயா‌ரிப்பில் அ‌ஜித் நடிக்கும் படத்தை கௌதம் இயக்குவதாக இருந்தது. அவர் படத்தின் கதையை உருவாக்க அதிக நாள் எடுத்துக் கொண்டதால் அவருக்குப் பதில் சரணை ஒப்பந்தம் செய்தனர். இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். 

இந்நிலையில் ஹா‌ரிஸுக்குப் பதில் பரத்வா‌ஜின் பெயர் அசல் படத்தில் அடிபட்டது. சரணும், பரத்வாஜும் இணைந்து ஏழு படங்களை தந்திருக்கிறார்கள், ஏழும் மியூசிகல் ஹிட். அசலுக்கு இசையமைப்பது ஹா‌‌ரிஸா இல்லை பரத்வாஜா என்ற கேள்விக்கு பதிலில்லாமலே இருந்தது.

இந்த குழப்பத்துக்கு தனது அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் முடிவுகட்டியிருக்கிறார் சரண். அசலுக்கு இசையமைக்கப் போவது பரத்வா‌ஜ் என தனது அறிவிப்பில்தெ‌ரிவித்திருக்கிறார். பரத்வா‌ஜ் இசையமைத்த தனது அனைத்துப் படங்களும் மியூசிக்கல் ஹிட். அத்துடன் விரைவாக இசையமைப்பார் என அவரை ஒப்பந்தம் செய்ததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அசல் படத்தில் அ‌ஜித்தின் காஸ்ட்யூமுக்கு ஸ்பெஷல் கவனம் எடுக்கிறார்கள். இதற்காகவே புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் விவேக் கருணாகரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிகை அலங்காரம் விக்ரம் மோகன்
Published in kungumam - 26.03.09
பெயர்தான் அசல். படத்தைப் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் நகல். எது உண்மை எது நகல் என்று அறிந்து கொள்வதற்குள் மேலும் பத்து வதந்திகள் புதிதாக முளைக்கின்றன. அ‌ஜித்தின் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்கும் சிலர் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

அசல் படம் ட்ராப்பாகிவிட்டது என்றுகூட ஸ்டுடியோ வட்டாரத்தில் கிளப்பி விடுகிறார்கள் என்றால் பார்த்து‌க் கொள்ளுங்கள். ச‌ரி, படம் குறித்த உண்மை நிலவரம் என்ன?

பொதுவாக போட்டோசெஷனை தவிர்ப்பவர் அ‌ஜித். ஆனால், அசலுக்காக சரணின் வேண்டுகோளை ஏற்று தல போட்டோசெஷனுக்கு சம்மதித்திருக்கிறார். சமீரா ரெட்டியும் இவரும் இடம்பெற்ற போட்டோசெஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. 

படத்திலிருந்து ஹா‌ரிஸ் ஜெயராஜை மாற்றிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்ட தகவலும் உண்மையில்லை. சரண் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வா‌ஜிடம்தான் அசலுக்கு இசையமைத்துதர கேட்டிருக்கிறார். காதல்மன்னனில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய சரணும், பரத்வாஜும் மோதி விளையாடு படத்தில் பி‌ரிந்தனர். மோதி விளையாடு படத்துக்கு கலோனியல் கஸின்ஸ் இசையமைத்துள்ளனர்.

செல்வராகவன் - யுவன், கௌதம் - ஹா‌ரிஸ் போல இதுவும் நிரந்தர‌ப் பி‌ரிவு என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அது தற்காலிகமானது. பரத்வா‌ஜின் சம்மதத்துடனே மோதி விளையாடு படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் சரண்.

சரண், அ‌ஜித், பரத்வா‌ஜ் கூட்டணியின் காதல்மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் அசலுக்கும் அதே கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அனைவ‌ரின் விருப்பம். ரசிகர்களின் விருப்பமும் அதுதான். 

Thanks - starajith.com

“Deccan Chroncile” dated March 25, 2009

“Times Of India” dated Mar 24, 2009








Thanks - Dinamalar.com 22.03.09


Published in daily paper "Dinakaran" dated Mar 20, 2009


Published in a weekly magazine "The Cinema" dated March, 2009


Published in Junior Vikatan bi-weekly magazine dated Feb 11, 2009


Published in The Hindu daily paper dated Feb 27, 2009