தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு இதுதான். சிம்பு அஜித்துக்கு வாய்ஸ் கொடுக்கப் போகிறார்!

அஜித்தின் ரசிகர் சிம்பு. இதனை பல பேட்டிகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தனது மன்மதன் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என கோஷமிடுவதுபோல் ஒரு காட்சியும் வைத்திருந்தார் சிம்பு.

சமீபத்தில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜித்போல் காஸ்ட்யூம் அணிந்து சிம்பு செய்த அலப்பறையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சரி, விஷ­யத்துக்கு வருவோம். சிம்பு தனது படங்களில் மட்டுமின்றி விரும்பி கேட்கும் அனைவரின் படத்திலும் பின்னணி பாடி வருவது தெரியும். அஜித்தின் அசல் படத்திலும் ஒரு பாடல் பாடுகிறாராம்.

சரண் இயக்கும் அசலுக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். படத்தில் வரும் அஜித்தின் ஓபனிங் பாடலை சிம்புவை வைத்து பாட வைக்கலாம் என்பது சரண் மற்றும் பரத்வாஜின் விருப்பமாம். இந்த விருப்பத்துக்கு அஜித் நிச்சயம் தடை சொல்லப் போவதில்லை. சிம்புவைப் பொறுத்தவரை அஜித்துக்கு பாடுவது அல்வா மாதிரி.

ஆக, அஜித்துக்காக சிம்பு வாய்ஸ் கொடுக்கயிருப்பது உறுதி என்கிறார்கள் அசல் யூனிட்டில். பொருத்திருந்து பார்ப்போம், ஸாரி… கேட்போம்.
நடிகர் அஜீத் குமார் தனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் தொடங்கப்பட்ட 'அசல்' திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

வரும் மே 1-ந் தேதி எனது பிறந்தநாள் வருவதையொட்டி எனது ரசிகர்கள் அனைவரும் அந் நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி.

நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன்.

மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன்.

மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Greetings!

I sincerely thank you for the response that was accorded to the inauguration of my film “ASAL” at Chennai recently. I convey my gratitude to my fans who could not make it but wished through my office. It has been brought to my attention that the members of my AJIT KUMAR Narpani Iyyakam have planned to celebrate my birthday falling on May 1st with huge fun fare. I sincerely feel that whole process will be highly inhuman if we celebrate my birthday on the background of our fellow Tamils languishing and suffering amidst death and pain in Srilanka.

Further to this we are aware that the General Elections are being conducted all over the Country. At this point of time, I sincerely feel our celebrations should not pose any discomfort to the authorities concerned.

Since I am leaving abroad for my shooting at the end of this month, I request my fans to circumvent the stress of trying to wish me in person. Vide this letter, I request the members of my organization to co-operate with the Iyyakam Headquarters in revamping the organizations.

With Love

Ajit Kumar
சூடுப்பிடித்திருக்கும் தேர்தல் கூட்டணி பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் அஜித்-சரண் கூட்டணியில் உருவாகும் அசலும் ஹாட் டாபிக்காகியுள்ளது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண், தனது கூட்டணி குறித்த அம்சங்களை அசைபோட்டபோது....... “ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.

வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”

அஜித்தின் கேரக்டர் டானா?

“இல்லைன்னு சொன்னா விடப்போறிங்களா என்ன? பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”.

இண்டர்நேஷனல் சேஸிங்னா எந்த நாட்டுக்கு போறீங்க?

“நாட்டுக்கு இல்லை, நாடுகளுக்கு. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. இன்னும் பத்து வருஷத்துக்கு பேசப்படுற ஒரு ஆக்‌ஷன் படமா அசல் இருக்கும்” சரணின் குரலில் அசல் வேகம்.






























பில்லாவுக்கு பிறகு 'தல' நடிக்கும் மற்றுமொரு 'டான்' கதைதான் அசல். 'அசல்னு தலைப்பு இருக்கே, அப்படின்னா நகலும் இருக்கணுமே?' என்கிறார்களாம் சரணிடம்.
'தெளிவா கேட்டுக்கோங்க, இதிலே ஒரு 'தல'தான். வில்லனும் ஹீரோவும் மோதிக்கிற பழிவாங்கல் கதை. ஆனா, இது வேற மாதிரி இருக்கும். 'அமர்க்களம்' எப்படி அஜீத்திற்கு ஒரு புது பரிமாணத்தை கொடுத்திச்சோ, அதே மாதிரி அசலும் கொடுக்கும்' என்றார் சரண். சில இடங்களுக்கு போனால் நரம்பெல்லாம் சிலிர்க்கும். அப்படிதான் அசலின் துவக்க விழாவும் இருந்தது அஜீத்திற்கு. வாசலில் நின்றிருந்த தொண்டர்கள், 'தல... கொஞ்சம் தலையை மட்டும் காட்டுங்க. போதும்' என்று கூக்குரல் இட்டார்கள். அவர்களுக்கு முகத்தை காட்ட சற்று உயரமான இடத்தை தேடினார் அஜீத். 'பால்கனிக்கு போயிடலாம்' என்று பிரபு அழைக்க, அங்கிருந்தபடியே கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அஜீத்.



கீழே இறங்கும்போது பிரபு சொன்னதுதான் அஜீத்தின் நரம்புகள் சிலிர்க்க காரணமாக இருந்த வார்த்தைகள். 'அப்பா தன்னோட ரசிகர்களை இங்கே நின்றுதான் உற்சாகப்படுத்துவார். திரளாக கூடிவிடும் ரசிகர்களை பார்க்காமல் திருப்பி அனுப்ப மனசு வராது அவருக்கு. அந்த நேரத்தில் இந்த பால்கனியில் நின்றுதான் அவங்களுக்கு கைகளை ஆட்டி அன்பை வெளிப்படுத்துவார்' என்றாராம் பிரபு.

அன்னை இல்லத்திலிருந்து கிளம்பும் போது திரும்பவும் அந்த பால்கனியை பார்த்து சிலிர்த்தார் தல!
Posted by Picasa


தி நகர் போக் சாலையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் நான்கு திரையரங்குகள் நிறையும் அளவுக்கு கூட்டம். தெருவெங்கும் அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்தி போஸ்டர்கள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள். அசல் படத் தொடக்க விழாவை படத்தின் ஓபனிங் நாளைப் போல் அசத்தினர் அஜித்தின் ரசிகர்கள்.

நல்லவேளை, தொடக்கவிழா அழைப்பிதழில் யார் யார் விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்பதை குறிப்பிடவில்லை. ரஜினியின் பெயரை போட்டிருந்தால் தி நகர் திமிலோகப்பட்டிருக்கும்.

சரணின் குருநாதர் பாலசந்தர் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தாணு, ஏ.வி.எம். சரவணன், கே.ஆர்.ஜி., நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோரை விழாவில் பார்க்க முடிந்தது. விழாவின் ஹைலைட் ரஜினியின் பே‌சியது.

பாபா படத் தோல்விக்குப் பிறகு எனக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. இந்த வீட்டில் வைத்துதான் சந்திரமுகி படத்துக்கு பூஜை போட்டார்கள். படம் மிகப் பெரிய வெற்றி. அசல் படத்துக்கு இப்போது பூஜை போடுகிறார்கள். இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என மனப்பூர்வமாக வாழ்த்தினார்.

தனது பேச்சின் நடுவே, அசல் ஹீரோ அஜித்தான் என்று ரஜினி குறிப்பிட்டபோது பார்வையாளர்கள் பக்கமிருந்து விசில்.

சிவாஜி இந்த வீட்டில் இருந்துதானே பாசமலர், பாலும் பழமும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படங்களின் சூட்டிங்கிற்கு சென்றிருப்பார் என வைரமுத்து சிவாஜியை நினைவு கூர்ந்தவிதம் சோகமான மலரும் நினைவு. இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ரஜினி, சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லம் தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகுக்கே தாய் வீடு என்றார்.

ரஜினியின் வருகையும், அஜித்தை அவர் வாழ்த்திய விதமும் ரசிகர்களை ரொம்பவே உணர்ச்சிவசப்படுத்தியது. அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தான், சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டாரே … கள்ளுண்ட களிப்பில் கலைந்தது ரசிகப் பட்டாளம்.

The occasion was the puja of Asal that stars Ajith in the lead.

“We’re in the process of finalising the two heroines in the film,” revealed director Saran, “Ajith will also don two get-ups in the film.”

 

Ajith promised that Asal be a landmark film in his career. The music for the film will be composed by Bharadwaj, who will also be collaborating with international musicians .

Though it was touted to be a simple puja function, the morning was a star-studded one with the presence of many Kollywood celebrities. Prabhu and Ramkumar were pleasant hosts, welcoming and greeting every one with a broad smile.

Actors Surya, Karthi, Shakthi and directors Vishnuvardhan and Vijay were also present on the occasion. 


அஜீத் நடிக்கும் அசல் பட பூஜையில் கலந்து கொள்ள வந்த ரஜினியை விடாமல் கேள்வி மழை பொழிந்த நிருபர்களைக் கையமர்த்திய ரஜினி, அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அவர் அளித்த பேட்டி:

அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?

அது பற்றி நான் என்ன சொல்றது... என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க...

ஆனா ஒரு ஸ்டார் என்பதையும் தாண்டி, அஜீத் நல்ல நடிகர். ஆனால் இன்று வரை அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில், அவரைச் சிறப்பாக யாரும் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு வந்தால் தூள் கிளப்புவார். மிகச் சிறந்த நடிகர் அஜீத்.. நோ டவுட்.

மக்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல கலைஞர். நிச்சயம் அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு மெஸேஜ் இருக்கும்.

சார் ஒரேயொரு அரசியல் கேள்வி கேட்கலாமா?

அதான் வேணாம்னு சொல்லிட்டேனே கண்ணா...

இந்தத் தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்றாவது சொல்ல முடியுமா?

ஹய்யோ..ஹய்யோ... சாரி (அவருக்கே உரிய சிரிப்புடன்)... நான் எதையும் சொல்ல மாட்டேன்னு சொன்னேனே... நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்..

சிரஞ்சீவி மாதிரி கட்சி ஆரம்பிக்கும் திட்டமிருக்கா?

நோ நோ நோ... இல்லை... அரசியல் கேள்விகள் வேண்டாம் ப்ளீஸ். நான்தான் முதல்லேயே சொன்னேனே... தாங்க் யூ என்றபடி எழுந்துவிட்டார்.


தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் பிரமாண்டப் படம் 'அசல்'.

அஜீத் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை, சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் நடந்தது. திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திய இந்த துவக்க விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்தினார்.

படத்தின் ஹீரோ அஜீத்தை வாழ்த்திய ரஜினி, பின்னர் பேசியதாவது:

"நண்பர் வைரமுத்து சொன்னதுபோல, இந்த அரண்மனையிலிருந்துதான் அந்த நடிப்புச் சக்கரவர்த்தி பாலும் பழமும், பாசமலர், திருவிளையாடல் போன்ற காவியங்களில் நடிக்கப் புறப்பட்டுப் போயிருப்பார். அந்த மாமனிதர் வாழ்ந்த அன்னை இல்லத்துக்கு வந்து போவது என் மனதுக்கு உகந்த விஷயம். இந்த அன்னை இல்லம் தென்னாட்டு திரையுலகுக்கே தாய்வீடு!.

இத்தனை ஆண்டுகளில் நானும் செளந்தர்யாவும் ஒன்றாக சேர்ந்து எந்தப் பட விழாவுக்கும் போனதில்லை. அதனால் நேத்தே சௌந்தர்யாகிட்டே சொல்லிட்டேன், நாளைக்கு நாம முதல் ஆளா அசல் பட பூஜைக்குப் போகலாம் என்று.

சந்திரமுகி படத்துக்கும் இங்குதான் பூஜை போட்டோம், ஆனா சிம்பிளாக. இப்போது அசல் படத்துக்கு நல்ல பிரமாண்டமாக அதே இடத்தில் பூஜை போடுகிறார் பிரபு. இது எந்த அளவு வெற்றிப் படமாக வரும் என்பதற்கு இந்த பூஜையே ஒரு சாட்சி.

ராம்குமார் மற்றும் பிரபு இருவருமே மிக அற்புதமான தயாரிப்பாளர்கள். இப்படித்தான் இருக்கணும். தங்கள் தந்தையின் புகழை, பெருமையை, இந்தக் குடும்பத்தின் பெயரை அப்படியே காத்து வருகிறார்கள். அது பெரிய விஷயம். என் பசங்களுக்கு அடிக்கடி சொல்வேன், இவர்களைப் போல வரணும், பெரியவங்களை மதிக்கக் கத்துக்கணும்னு.

சந்திரமுகி படம் எடுத்தப்போ, என்னைவிட அதிக டென்ஷன் ஆனவர்கள் ராம்குமார்-பிரபுதான். பாபா சரியா போகாத அந்த சூழ்நிலையில் படம் பண்ணுகிறோம்.

'அண்ணே, இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும், நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்கன்'னு சொல்லி அருமையாக தயாரித்து, பிரமாண்ட வெற்றி பெற வைத்தார்கள்.

அதற்குப் பிறகு அஜீத்தை வைத்து இந்தப் படம் தயாரிக்கிறார்கள். நிச்சயம் இது வெற்றி பெறும். அஜீத்துக்கும் இப்போது ஒரு வெற்றி தேவை. அஜீத்.. கவலைப்படாதீங்க, நல்ல இடத்துக்கு வந்திருக்கீங்க. நல்ல வெற்றியைப் பெறுவீங்க. நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நான் இருப்பேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் சரண், கமர்ஷியல் அண்ட் க்ளாஸ் ரக படங்களைத் தருவதில் கைதேர்ந்தவர். மிகப் பெரிய வெற்றி பெறும். வாழ்த்துக்கள் என்றார் சூப்பர் ஸ்டார்.

விழா முடிந்து அஜீத்துடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மின்னலாய் கிளம்பினார் ரஜினி.

விழாவில் பேசிய வைரமுத்து, "திரையுலகில் பாரம்பரியத்தையும் பழைய உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், பிரபுவும் ராம்குமாரும், தங்கள் தந்தையின் பெருமையையும், பாரம்பர்யத்தையும், அவரது பழைய உறவுகளையும் மறக்காமல் தேடி வந்து சிறப்பிப்பது மகிழ்ச்சியளிக்கிறது", என்றார்.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எவி எம் சரவணன், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், சரண் உள்ளிட்ட பலரும் பேசினர். பிரபுவும் ராம்குமாரும் நன்றி கூறினர்.

இந்த விழாவால் தி.நகர் போக் ரோடு பகுதியே ரசிகர் வெள்ளமாகக் காட்சியளித்தது.
வரும் 8ஆ‌ம் தேதி அசல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதன் மூலம் படம் கைவிடப்பட்டதாக எழுந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சரண் இயக்கத்தில் அ‌ஜித் நடிக்கும் நான்காவது படம் அசல். சிவா‌ஜி பிலிம்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வா‌ஜ் நான்காவது முறையாக அ‌ஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்.

அ‌ஜித் ஜோடியாக நடிப்பவர் சமீராரெட்டி. சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். நீரவ்ஜாவின் முன்னாள் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் கருணாகரன் காஸ்ட்யூம்.

வரும் 8ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களை படத்தில் பயன்படுத்தும் திட்டமும் சரணுக்கு இருக்கிறது.