எஸ்.தாணு, ஆஸ்கர் ரவிச்சந்திரன்... இந்த இரு பெயர்களுடன் தயாநிதி அழகி‌ரியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. அ‌ஜித்தின் 50வது படத்தை தயா‌ரிக்கப் போவது யார் என்ற கேள்விக்கான சாய்ஸ் இவர்கள்.



தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் மூவிஸ் தற்போது தமிழ் படம் என்ற படத்தை தயா‌ரித்து வருகிறது. இதையடுத்து அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தையும் கிளவுட் நைன் தயா‌ரிக்கிறதாம்.

அ‌ஜித் தற்போது நடித்துவரும் அசல் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்க முன்னணி தயா‌ரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் தாணு.

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்கும் விருப்பம் இருக்கிறது. தற்போது தயாநிதியின் பெயரும் அடிபடுவதால், அவருக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. அசல் படத்துக்காக வெளிநாடு சென்றிருக்கும் அ‌ஜித் திரும்பி வந்தால் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.


Fans of the ultimate star Ajith are rejoicing at the hint of a recent development. Sources revealed that the actor would now join hands with Dhayanidhi Alagiri, the son of Union Minister MK Alagiri for the film that would mark a golden jubilee in his career. The movie will be produced under Dhayanidhi’s home banner Cloud Nine Movies.

According to the buzz, there are three directors contending for helming the film. The frontrunner is KS Ravikumar, who has given a huge hit with Ajith in Varalaaru. Also Venkat Prabhu with whom Ajith shares great vibes and Vishnuvardhan who has given a blockbuster with Ajith (Billa) and has narrated a one-liner script to has narrated a one-liner script to the star, are being considered for the director’s chair.

Ajith is now busy working on his 49th film Asal with Saran under Sivaji Productions banner. An official announcement regarding the new film is expected before Ajith leaves for Hungary in the third week of September to complete his next schedule of Asal.

- Deccan Chronicle 04.09.09


நெருங்கிய நண்பர்கள் வீட்டு விஷேசம் என்றால் முதல் ஆளாக வந்து விடுவார் நம்ம தல.. விஷேசத்துக்கு வரும் இதர நண்பர்களை அவரே வரவேற்று, உபசரித்து, பந்தி பரிமாறி அனுப்புவதில் நெறைய ரிலாக்ஸ் கெடைக்கிரதாம்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும் காத்துவாக்கில் பல காதுகளை சென்றடைந்து வருகிறது இந்த செய்தி.



அஜித் நடிக்கும் ‘அசல்’ படத்தில் சிம்பு கௌரவவேடத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. ‘அசல்’ தயாரிப்பு தரப்பில் மறுக்கப்பட்டு வந்த இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதாவது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடப்போகிறாராம் சிம்பு. இப்பாடலை சிம்புவே தனது சொந்தக்குரலில் பாடப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அவரது படங்களில் ஒரு சீனிலாவது அஜித் புகழ் பரப்பாமல் இருந்ததில்லை. அந்த வகையில் சிம்புவுக்குள் ரொம்ப நாளாகவே ‘தல’ படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தனது எண்ணத்தை அஜித்திடம் நேரடியாகவே ஒருமுறை சொல்ல, ‘அசலி’ல் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் அஜித்.

மலேசியாவில் படப்பிடிப்புகள் முடிந்ததும் சிம்பு நடனத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்போகிறார்களாம்.
‘அன்னை இல்லம்’ சொல்லும்போதே ரசிகர்களின் அதுவும் குறிப்பாக சிவாஜியின் ரசிகர்களின் மனதுக்குள் சுகம் சேர்க்கும் வார்த்தை. பல்வேறு திரையுலக ஜாம்பவான்கள் கால்பதித்து சென்று வந்த ஒரு கலைக்கூடம்.

‘அவன்தான் மனிதன்’ படத்தில் சிவாஜி வீட்டுக்கு ‘ஆனந்த பவனம்’ என்று பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே சிவாஜி கணேசனின் ஆனந்த பவனம் அன்னை இல்லம்தான்.

1950கள் தொடங்கி இன்று வரை தமிழ்த் திரையுலகினரால் மரியாதையோடு உச்சரிக்கப்பட்டு வரும் இந்த அன்னை இல்லத்தின் உபசரிப்பால் உருகிப் போயிருக்கிறார் அஜித்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் அஜித்தின் ‘அசல்’ படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக அன்னை இல்லத்தில் நடந்து வருகிறது. அதனால் அங்கு சென்று அன்னை இல்லத்தாரின் அன்பு பிடியில் சிக்கிய அஜித், “அது அந்த இல்லத்தின் பாரம்பரியத்தை காட்டுகிறது” என்று நெகிழ்ந்துள்ளார்.

Published in daily magazine "Deccan Chronicle" dated May 06, 2009


Published in bi-monthly magazine "Kumudam Snegithi" dated May 01, 2009

- நன்றி ஸ்டார்அஜித்.காம்
- நன்றி ஸ்டார்அஜித்.காம்

Published in weekly magazine "Kumudam" dated Apr 30, 2009

வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறாரோ, அந்தளவுக்கு பிரமாண்டமாக அமையும் ஹீரோவின் பராக்கிரமம். வில்லன் தண்ணீர் என்றால் ஹீரோ தாமரை தண்டு.

இந்த சூத்திரம் தெரிந்தவர் சரண். அஜித்தை வைத்து இயக்கும் அசலில் வில்லன்களை அஜித் அளவுக்கு பலமிக்கவர்களாக செதுக்கியிருக்கிறாராம். படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.

இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித். நடுவே சமீரா ரெட்டியுடனான சஹானா சாரலும் உண்டு. இசை பரத்வாஜ்.

படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித். இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண். உண்மைதான், படத்தைப் பார்த்தாலே தெரிகிறதே!
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு இதுதான். சிம்பு அஜித்துக்கு வாய்ஸ் கொடுக்கப் போகிறார்!

அஜித்தின் ரசிகர் சிம்பு. இதனை பல பேட்டிகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தனது மன்மதன் படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என கோஷமிடுவதுபோல் ஒரு காட்சியும் வைத்திருந்தார் சிம்பு.

சமீபத்தில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜித்போல் காஸ்ட்யூம் அணிந்து சிம்பு செய்த அலப்பறையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சரி, விஷ­யத்துக்கு வருவோம். சிம்பு தனது படங்களில் மட்டுமின்றி விரும்பி கேட்கும் அனைவரின் படத்திலும் பின்னணி பாடி வருவது தெரியும். அஜித்தின் அசல் படத்திலும் ஒரு பாடல் பாடுகிறாராம்.

சரண் இயக்கும் அசலுக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். படத்தில் வரும் அஜித்தின் ஓபனிங் பாடலை சிம்புவை வைத்து பாட வைக்கலாம் என்பது சரண் மற்றும் பரத்வாஜின் விருப்பமாம். இந்த விருப்பத்துக்கு அஜித் நிச்சயம் தடை சொல்லப் போவதில்லை. சிம்புவைப் பொறுத்தவரை அஜித்துக்கு பாடுவது அல்வா மாதிரி.

ஆக, அஜித்துக்காக சிம்பு வாய்ஸ் கொடுக்கயிருப்பது உறுதி என்கிறார்கள் அசல் யூனிட்டில். பொருத்திருந்து பார்ப்போம், ஸாரி… கேட்போம்.
நடிகர் அஜீத் குமார் தனது பிறந்த நாளை கொண்டாடவேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் தொடங்கப்பட்ட 'அசல்' திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

வரும் மே 1-ந் தேதி எனது பிறந்தநாள் வருவதையொட்டி எனது ரசிகர்கள் அனைவரும் அந் நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி.

நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன்.

மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன்.

மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Greetings!

I sincerely thank you for the response that was accorded to the inauguration of my film “ASAL” at Chennai recently. I convey my gratitude to my fans who could not make it but wished through my office. It has been brought to my attention that the members of my AJIT KUMAR Narpani Iyyakam have planned to celebrate my birthday falling on May 1st with huge fun fare. I sincerely feel that whole process will be highly inhuman if we celebrate my birthday on the background of our fellow Tamils languishing and suffering amidst death and pain in Srilanka.

Further to this we are aware that the General Elections are being conducted all over the Country. At this point of time, I sincerely feel our celebrations should not pose any discomfort to the authorities concerned.

Since I am leaving abroad for my shooting at the end of this month, I request my fans to circumvent the stress of trying to wish me in person. Vide this letter, I request the members of my organization to co-operate with the Iyyakam Headquarters in revamping the organizations.

With Love

Ajit Kumar
சூடுப்பிடித்திருக்கும் தேர்தல் கூட்டணி பேச்சுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் அஜித்-சரண் கூட்டணியில் உருவாகும் அசலும் ஹாட் டாபிக்காகியுள்ளது.
ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண், தனது கூட்டணி குறித்த அம்சங்களை அசைபோட்டபோது....... “ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.

வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”

அஜித்தின் கேரக்டர் டானா?

“இல்லைன்னு சொன்னா விடப்போறிங்களா என்ன? பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”.

இண்டர்நேஷனல் சேஸிங்னா எந்த நாட்டுக்கு போறீங்க?

“நாட்டுக்கு இல்லை, நாடுகளுக்கு. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. இன்னும் பத்து வருஷத்துக்கு பேசப்படுற ஒரு ஆக்‌ஷன் படமா அசல் இருக்கும்” சரணின் குரலில் அசல் வேகம்.